செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் .எம்.ஆர் சாலையில் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி செங்கண்மால் கிராமம் வழியாக கடலில் சென்று சேர்வதற்கானநடவடிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் நந்திவரம்  கூடுவாஞ்சேரியில் உதயசூரியன் நகர், மகாலட்சுமி நகர், வல்லஞ்சேரி, ஊரப்பாக்கம் ஏரி, காரனைபுதுச்சேரி, நந்திவரம் ஏரி, உபரி நீர் வெளியேறி  ஜி.எஸ்.டி சாலையில் செல்வதற்கான நடவடிக்கையாகநெடுஞ்சாலைத் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள ஆர்.சி.சி கல்வெட்டின் வழியாக அடையார் ஆற்றில்கலப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு உணவு பாதுகாப்பு துறைஅமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நந்திவரத்தில் உபரி நீர்வெளியேறி  வருவதையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால கட்டுப்பாட்டு அறையினைமாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து வரும் புகார் குறித்துபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவில் வண்டலூர்மீஞ்சூர் செல்லும் சாலையில் ஏரிகளில் உள்ள உபரி நீர்  முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர் வழியாக அடையாறு ஆற்றில் செல்வதை  மாண்புமிகு குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு பாதுகாப்பு துறைஅமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள பொது மக்களுக்கு உணவுமற்றும் அடிப்படை  தேவைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

அனகாபுத்தூர் சீனிவாசபுரத்தில் பகுதி I, II, III ஆகிய  தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும்பொதுமக்களை ஆகியோர் பார்வையிட்டு உணவு, தண்ணீர் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் படகுமூலம் கொண்டு செல்லப்படுவதை பார்வையிட்டனர். மேலும் அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அம்மாஉணவகத்திற்கு சென்று உணவு தரம்  குறித்து ஆய்வு செய்து சமையற் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம்உணவு நன்றாக சமைத்து பொதுமக்களுக்கு வழங்க‌ வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்அறிவுறுத்தினர்.

கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலணியில் வசிக்கும் சுமார் 300 நபர்கள் பல்லாவரம்கண்டோன்மென்ட் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, பால் போன்ற அத்தியாவசியபொருட்களை வழங்கினார்கள்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசுசெயலாளர் சமயமூர்த்தி, ...  மாவட்ட ஆட்சித் தலைவர்  ..ராகுல் நாத், ...,  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்   எஸ். ஆர்.ராஜா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்  .கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சிமேயர்  வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர்  காமராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி)  ஆனந்த் குமார் சிங், ..., திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்  இதயவர்மன், கூடுவாஞ்சேரிநகர் மன்ற தலைவர்  கார்த்திக் தண்டபாணி, 1வது மண்டல குழு தலைவர் வே கருணாநிதி மற்றும் அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.