சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ்புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயனடையும் வகையில் பழைய பேருந்துகளை மாற்றம் செய்து, அதற்கு பதிலாக புதிய வகை பேருந்துகளாக இயக்கிடவும், கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் பயன்பெறும் வகையில் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்கள் மற்றும் ஏற்கனவே இயங்கி வந்த வழித்தடங்களை நீட்டிப்பு செய்து பேருந்து சேவை கிடைத்திடவும் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.  அந்தவகையில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இன்றையதினம் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் சேலம் நகரப் பேருந்துநிலையத்திலிருந்து  புதிய பேருந்து நிலையம் வழியாகஜங்சன் வரையில் 6 புதிய நகரப் பேருந்துகளும் மற்றும்எடப்பாடியில் இருந்து கொமராபாளையம் வரையிலும், ஓமலூரில் இருந்து கீரைக்காரனூர் வரையிலும், மேட்டூரிலிருந்து கொளத்தூர், கோவிந்தபாடி வழியாக காரைக்காடு வரையிலும், ஆத்தூரிலிருந்து தலைவாசல் வழியாக ஊனத்தூர் வரையிலும், மேட்டூரிலிருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் வரையிலும் என மொத்தம் 11 புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பாப்பம்பாடிக்கு சித்தர்கோவில், நல்லணம்பட்டி, இளம்பிள்ளை வழியாக இயக்கப்பட்ட பேருந்து தற்போது சித்தர்கோவில், காடையாம்பட்டி, இளம்பிள்ளை வழியாக பாப்பம்பாடிக்கும், சேலம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது வேப்பிலைப்பட்டி வரையிலும் என 2 வழித்தட மாற்றம் செய்யப்பட்ட பேருந்து சேவைகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மேச்சேரியிலிருந்து கீரைக்காரனூர் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது ஓமலூரிலிருந்து கீரைக்காரனூர் வரையிலும், நல்லமாத்திலிருந்து ஆத்தூர் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது நல்லமாத்திலிருந்து கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக ஆத்தூர் வரையிலும், வீ.களத்தூரிலிருந்து ஆத்தூர் வரையில் இயக்கப்பட்ட 2 பேருந்துகள் தற்பொழுது வீ.களத்தூரிலிருந்து வெள்ளையூர் வழியாக ஆத்தூர் வரையிலும், ஆத்தூரிலிருந்து நல்லமாத்தி வரை இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது ஆத்தூரிலிருந்து கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக நல்லமாத்தி வரையிலும்,  ஆத்தூரிலிருந்து பிள்ளையார்பாளையம் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது ஆத்தூரிலிருந்து கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக பிள்ளையார்பாளையம் வரையிலும், கைகளத்தூரிலிருந்து தலைவாசல் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது கைகளத்தூரிலிருந்து வெள்ளையூர் வழியாக தலைவாசல் வரையிலும்,  வாழப்பாடியிலிருந்து பேளுருக்கு இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது பேளுரிலிருந்து ரங்கனூர் வரையிலும், குறிச்சியிலிருந்து பேளுருக்கு இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது பேளுரிலிருந்து ரங்கனூர் வரையிலும், எடப்பாடியிலிருந்து ஆணைப்பள்ளம் வரையில் இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது ஆணைப்பள்ளத்திலிருந்து கல்லூரல்காடு வரையிலும்,  மேட்டூரிலிருந்து மூலக்காடு வரையில் இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது மேட்டூரிலிருந்து ஆடையூர், மேச்சேரி வழியாக புக்கம்பட்டி வரையிலும், ஜலகண்டாபுரத்திலிருந்து மேச்சேரி வரையில் இயக்கப்பட்ட  பேருந்து தற்பொழுது ஜலகண்டாபுரத்திலிருந்து மாதநாய்க்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக மேச்சேரி வரையிலும் என 11 பேருந்து சேவைகள் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார், துணை மேயர் மா.சாரதா தேவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.