“இறுதி முயற்சி” திரைப்பட விமர்சனம்

வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி மீனாட்சி, மெளனிகா, நீலேஷ், விட்டல்ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “இறுதி முயற்சி”. ரஞ்சித் வட்டிக்கு கடன் வான்கி துணிக்கடை நடத்தி பெறும் நஷ்ட்டத்துக்கு உள்ளாகிறார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். கந்து வட்டி கடன் தொல்லையால் மனைவி மக்களுடன் தள்ளாடும் ரஞ்சித் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் கதை. கந்துவட்டிக்கு கடன் வாங்கி அத திருப்பிக் கொடுக்க முடியாமல் போன பலபேர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் இன்றும் தமிழகத்தில் நடந்தேறி வருகின்றது. அரசும் கந்துவட்டிக்காரர்களை கைது செய்யும் சட்டம் இயற்றினாலும் அதை முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறிதான். தனியார் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க மறைமுகமாக ரவுடிகளிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். சில தனியார் வங்கி ஊழியர்கள் விவசாயிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதால் பல விவசாயிகள் தற்கொலையும் செய்து கொண்டதை நாடறியும். இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள இயக்குநர் வெங்கட் ஜனா ஒரு படிப்பினையை திரையில் நடத்தியுள்ளார். ரஞ்ஜித் தனது நடிப்பால் “இனி கடனே வாங்கக் கூடாதப்பா” என்று பார்வையாளர்கள் எண்ணும் அளவுக்கு திறம்பட நடித்துக்காட்டியுள்ளார். படத்தில் சிறிதளவும் சினிமாத்தம் இல்லை என்பது பாராட்டுதலுக்குறியது. படத்தின் ஓட்டம் உண்மையின் பாதையில் ஓடுகிறது. கணவனுக்கேற்ற மனைவியாக கணவனுக்கு உறுதுணையாக நடித்திருக்கும் மெகாலி மீனாட்சி பெண்மையின் குணத்தை திரையில் காட்டியிருக்கிறார். நெஞ்சு பொறுக்குதிலேயே இந்த நிலை கெட்ட கந்துவட்டிக்காரனை நினைக்கையிலே. இசையும் ஒளிப்பதிவும் மனதை இளக்குகிறது.