விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் துப்பறிவு படமாக உருவாகியுள்ளது. அஜய் திஷான், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன், இப்படத்தின் வில்லனாக அறிமுகமாகிறார். அவரது நடிப்பு தமிழ் திரையில் புதிய வில்லனாக ஒரு புதிய கட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, கலகப்போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, மற்றும் அந்தகாரம் நடராஜன் உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.********
யுவா S ஒளிப்பதிவாளராகவும், ராஜா A கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். மும்பையில் படமாக்கப்பட்ட நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் VFX பணிகள் படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன.