அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம்

அஜ்மான் காய்கறி மற்றும் பழ மார்க்கெட் அருகில் அல் ஹிரா மெடிக்கல் சென்டர் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இல்யாஸ் காசிம் என்பவரால் இந்த மருத்துவ நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ நிலையம் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான இலவச பொது மற்றும் பல் சிகிச்சை தொடர்பான இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார். குறிப்பாக பல் தொடர்பான பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்க உதவியாக இருக்கும். இந்த இலவச ஆலோசனையை பெற முன்பதிவு செய்ய வேண்டிய தொடர்பு எண் :Laneline 06 7444 929 Mobile. 0501074322 Whatsup 055 3821977