அதிமுக கழக செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 31.7.2020 அன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் 31.7.2020 அன்று கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் ஏ.மருதராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் 31.7.2020 அன்று கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.