அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்த வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

T-1 அம்பத்தூர் காவல் நிலைய ஸ்பெஷல் மொபைல் வாகனத்தின் ஓட்டுநராக ஆயுதப்படை காவலர் திரு.P.வீரணன் (கா.எண். 47098) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17.07.2020 அன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளிக் குப்பம், சுங்கச்சாவடி அருகில் பணியிலிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத் திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் விசாரணை செய்ய சென்ற போது, வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் தப்பியோடிவிட்டார். தப்பி ஓட முயன்ற மற் றொரு நபரை மடக்கி பிடித்தும் பின்னர் விசாரணையில் பிடிபட்ட நபர் இருசக்கர வாகனத் தின் முன்னால் உள்ள பெட்ரோல் டேங்க் கவருக்குள் மறைத்து வைத்து 2 பண்டல்கள் கஞ்சா எடுத்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் பிடிபட்ட நபரை T-1 அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டது

T-1 அம்பத்தூர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கோபாலகிருஷ்ணன் (எ)சஞ்சய், வ/19, த/பெ.ஜெகன், 3வது தெரு, கண்ணதாசன் நகர், கொடுங்கையூர் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் பல்சர் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப் பட்டது. கைது செய்யப்பட்ட கோபால கிருஷ்ணன் (எ)சஞ்சய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலர் திரு.வீரணன் (கா.எண். 47098) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இன்று (20.7.2020) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.