அயல்நாடுகளில் இறந்த தமிழர்கள் அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம்

தென்காசி மாவட்டம், கீழ்கடையம் புலவனூரைச் சேர்ந்த பொன்னுதுரை, மேற்கு ஆப்பிரிக் காவின் சியர்ரா லியோன் நாட்டில், மின்கோபுரங்கள் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வந்தார். பணிகள் சரிவர நடக்கவில்லை எனக்கூறி, நிறுவனத்திற்கும், பொன்னுதுரை மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்தன. இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி, அவரது மனைவி மெர்சி லில்லிக்குக் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து உடல்கூறு சோதனை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தார்.

விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, ஆண்டியாபுரம் ஜெகவீரன்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், மலேசியாவின் ஜொகூர் பாருவில் வேலை பார்த்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். மேற்கண்ட இருவரது உடல்களையும் தமிழகத் திற்குக் கொண்டு வந்து சேர்க்கும்படி கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மின்அஞ்சல் கடிதம் எழுதி உள்ளார். அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளார்.