ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சகி’ டீஸர்

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு ள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை பத்து மணிக்கு படத்தின் டீஸர் சுதந்திர தின விசேஷ வெளியீடாக வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். உற்சாகமாக நடனமாடும் கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் போஸ்டரில் தோற்றமளிக்கிறார்.

விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார்.  ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்க சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப் பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், ஆதி பினிஷெட்டி, ஜகபதி பாபு மற்றும் பலர் தொழில்நுட்பக் குழு: இயக்குநர்: நாகேஷ் குக்குனூர். வழங்குவது: தில் ராஜூ (ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ்) தயாரிப்பு நிறுவனம்: வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர்: சுதீர் சந்திரா பதிரி இணை தயாரிப்பாளர்: ஷ்ராவ்யா வர்மா இசை யமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவாளர்: சிரந்தன் தாஸ்