ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா பாதித்தவர்களை நலம் விசாரித்தார்


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் 06.7.2020 அன்று காலை சென்னை, எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் காவல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் சித்ரா மற்றும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கொரோனா பாதித்த காவல் ஆளிநர்களிடம் வாட்சப் வீடியோ கால் மூலம் பேசி, அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பலாம் என்று ஆறுதல் கூறி, குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு, நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் ஆர்.திருநாவுக்கரசு தலைமையிட இணை ஆணையாளர் எஸ்.விமலா மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.