இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ.

காஞ்சி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக துணைச் செயலாளராக இருப்பவர் குரோம்பேட்டை நாசர். இவர் காது வலி காரணமாக கடந்த 07.12.2019 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தலைவர் வைகோ அவர்களுக்கு செய்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரவிலேயே அந்த மருத்துவ மனையின் தலைமை மருத்துவரை தொலைபேசியில் அழைத்து நாசர் எனக்கு மிகவும் வேண்டியவர் தீராத இயக்கப் பற்றாளர். அவர் பூரண நலம் பெற உயர்சிகிச்சை அளிக்குமாறு தலைவர் பேசினார். மேலும், காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட தலைவர் வைகோ அவர்கள், நாசர் அவர்கள் அனுமதிக் கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார். தலைமை மருத்துவரை சந்தித்தபோது நாசருக்கு காது எலும்பில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவைச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார் என்றார்.சரி அவரை நான் பார்க்க வேண்டும் என்றார் தலைவர். லிப்ட் வர தாமதமானது அதற்குள் மாடிப்படியில் ஏறிச்செல்வோம் என்றார். எங்களுக்கு சற்று அச்சமாக இருந்தது. காரணம் மருத்துவ ஓய்வுக்குப் பின்பு தலைவர் அதிகமாக மாடிப்படி ஏறுவதில்லை. ஆனால் அன்று மூன்றாவது மாடி ஏறி நாசர் இருக்கும் அறைக்குச் சென்றார்.


அப்போது குடும்பத்தினர் மாமா, இப்போதுதான் அப்பாவை அறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் இரண்டு மணி நேரம் ஆகும். நீங்கள் உங்கள் உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள், நாங்கள் அப்பா வந்த பின்பு சொல்கிறோம் என்று அவருடைய மனைவி கூறினார். இல்லையம்மா உங்க கணவர் எனக்காக விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருப்பார். சிறைச் சாலை…நீதிமன்றம் என்றாலும் கால் கடுக்க நிற்பார், அவருக்காக இன்று நான் காத்திருக்கிறேன். அவர் வந்த பின்பு மாமாவை (நாசரை வைகோ “மாமா” என்றும் வைகோவை நாசர் “மாமா” என்றும் கூறுவார்கள்) பார்த்துவிட்டுத்தான் செல்வேன் என்றார் நம் தலைவர் வைகோ. குடும்பத்தினர் மனம் உருகி நெகிழ்ந்தனர். அம்மா கட்சிக்காரர்கள் என் குடும்பம்மா…அவர்களுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க இயலாது. அதேபோல எனக்கு ஏதாவது என்றால் அவர்களுக்கு தாங்க முடியாது இவர்கள் தானம்மா கட்சிக்கு பலம் என்றார் தலைவர்.

இரண்டு மணி நேரம் காத்திருப்புக்குப் பின்பு குரோம்பேட்டை நாசர் அறுவைச் சிகிச்சை முடித்து அழைத்து வரப்பட்டார்.கண்விழிக்க முடியாத நிலையில் மயக்கத்துடன் அழைத்து வரப்பட்ட நிலையிலும் தலைவரின் குரல் கேட்டு மாமா என்று விழித்தார். மாமா நீங்க எப்ப மாமா…இங்க…!இரண்டு மணி நேரமா இங்கதான் மாமா இருக்கார் என அவர் மனைவி சொல்ல, தலைவரின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு கண்ணீர் வடித்தார் குரோம்பேட்டை நாசர்…!

தண்ணீர் ஊற்றி வளர்த்த இயக்கமல்ல மறுமலர்ச்சி திமுக…! தொண்டர்களின் கண்ணீரால் பாசனம் பெற்றதுதான் நமது இயக்கம்.! தலைவனே…இதற்காகத்தானே இத்துணை ஆண்டுகள் உன்னோடு ஓடுகிறோம். தலைவருடன் அண்ணன் தி.மு.இராசேந்திரன், தொண்டர் படை ராமையா உடன் இருந்தனர். இவ்வாறு நட்புடன் மணவை தமிழ்மாணிக்கம் கழக தேர்தல் பணிச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக. என்று, தமிழ்மாணிக்கம் தனது புதினத்தில் பதிவிட்டுள்ளார்.