இரட்டையர்கள் உலக சாதனை

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகளை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி புதுச்சேரி ஆளுநர் முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்ற காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி வயது 9. இவர்களின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் சார்பாக தயார் செய்யப்பட்ட புத்தகத்தை சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்டார்.

இவர்களின் சாதனையை அறிந்த வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பினர் இவர்கள் வாங்கிய சான்றிதழ்களை ஆய்வு செய்து உலகிலேயே முதன் முதலாக ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் 6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை செய்ததை கண்டறிந்து வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.கலைவாணி மற்றும் முதன்மைச் செயலாளர் டாக்டர். தஹ்மிதா ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் உலக சாதனை படைத்த இரட்டையர்களுக்கு வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் மற்றும் வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்டர்ஸ் ஆகியவற்றில் உலக சாதனையை பதிவு செய்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.