உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய வளாகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.