ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் இன்று (11.09.2019) ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீரராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளில் மேற்கொண்டார். அதன்பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு  விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தூய்மையே சேவை விழிப்புணர்வு நடவடிக்கைகளை துவக்கி வைத்தார். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகள் 7 பேரூராட்சிகள் 4 நகராட்சிகளில் 11.09.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழகத்தில் 01.01.2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தற்போது துவங்கப்பட்டுள்ள இவ்விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொட்களை தவிர்த்தல் அதற்கான மாற்றுப் பொருளை பயன்படுத்திட ஊக்குவித்தல் உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி மூன்று கட்டங்களாக விழிப்புணர்வு பணிகள் மேலும் தீவிரமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 11.09.2019 முதல் 01.10.2019 வரை சுற்றுச்சூழல் மேம்பாடு பிளாஸ்டிக் ஒழிப்பு சுகாதாரம் போன்றவைகளை வழியுறுத்தி விழிப்புணா;வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 02.10.2019 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமங்களில் உள்ள பொது இடங்கள் அரசு கட்டிடங்கள் சாலை மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் மூன்றாம் கட்டமாக 03.10.2019 முதல் 27.10.2019 வரை கிராம பகுதிகளில் சேகாpக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிhpத்தல் மறுசுழற்ச்சி செய்திட ஊக்குவித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ‘பிளாஸ்டிக் ஒழிப்பு” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. த.கெட்ஸி லீமா அமாலினி உதவி திட்ட அலுவலர்கள் திரு.கண்ணன் திரு. முருகேசன் திரு.கிருஷ்ணகுமார், திரு.சரவண பாண்டியன் வட்டார வளா;ச்சி அலுவலர் திரு.சன்முகநாதன் ஊரக வளா;ச்சி உதவி பொறியாளர்கள் திரு. அருண்பிரசாத் திரு.இராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.