எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 22: காவல்துறை கூடுதல் இயக்குநர் எம். ரவி, இ.கா.ப., இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. மணமக்கள் டாக்டர் இதழ்யா ரவி மற்றும் டாக்டர் சித்தார்த் வெங்கடேசன் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். உடன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எ.வா. வேலு, சக்கரபாணி, தங்கம் தென்னரசு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, அ. ராசா மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.