ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 28, 2020: இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் 2020 விருது, மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிக ளுக்கு (Eklavya Model Residential Schools – EMRS) சிறப்பு முக்கிய த்துவம் அளிக்கிறது. முதன் முறை யாக தேசிய நல்லாசிரியர் விருது உத்தரகண்டில் டேராடூன் கால்சியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த சுதா பைனுளி என்கிற ஆசிரியைக்கு வழங்கப் பட்டுள் ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத்துறை (முன்ன தாக மத்திய மனித ஆற்றல் மேம்பாடு) இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர்களுக்கான தேசிய விருதை வழங்கு வதற் காக ஆசிரி யர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேசிய அளவிலான தனிப்பட்ட தேர்வுக் குழுவை அமைத்திருந்தது. இணைய வழியில் வெளிப் படையாக நடைபெற்ற மூன்று கட்டத் தேர்வுக்குப் பிறகு 47 நல்லாசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த 47 பேரில் ஒருவராக ஆசிரியை சுதா பைனுளி இடம்பெற்றிருந்தார். ஏகலைவன் பிறந்தநாள் தோட்டம் அமைத்தல்; கல்வி குறித்த நாடகங்கள் நடத்துதல்; ஏகலைவன் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைத் தல்; வளர்ச்சிப் பணிமனைகள் நடத்துதல்; போன்ற பல புதிய முயற்சிகளை மேற்கொண்டி ருந்தது அவரது சாத னைகளில் தனித்துவமாகும். கல்விக்கும் பழங்குடியின மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச் சிக்கும் இடையேயான சமநிலையை உருவாக்கி மத்தியப் பழங்குடியின விவகாரங்களில் முயற்சிகளை சரியான திசையில் எடுத்துச் சென்றது, அவரது தொடர் சாதனையாகும்.

மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் முண்டா சுதாவுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். “உண்மையில் ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனையாகும் இது. ஏகலைவன் வரலாற்றில் ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். தேசிய விருதுக்காக சுதா பைனுளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”.