“ஒன் வே” படம் மூலம் கலக்க வரும் நடிகை ஆரா

நடிகைகள் ஒன்று மாடர்னாக இருப்பார்கள், இல்லையேல் குடும்ப பாணி கலாச்சார பாவனையோடு இருப்பார்கள். இரண்டு விதமும் கலந்த மாதிரி ஒரு சில நடிகை களே இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் ஒரு தனித்த வரவேற்பு உண்டு. சினிமாவிலும் அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைவார்கள். அந்த வகையில் இரண்டு வித தோற்றங்களிலும் கலக்கும் நடிகையாக ஆரா இருக் கிறார். நளினமும், நடிப்பும் அவருக்கு எளிமையாக வருகிறது. முதல் படமான “பைசா” படத்திலேயே பேரழகு தோற்றத்திலும், அசரடிக்கும் பாவனைகளாலும், நல்ல நடிகை என பெயர் பெயர் பெற்று விட்டார். வந்தவேகத்தில் நிறைய படங்க ளில் நடிக்காமல், தான் நடிக்கும் படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் “ஒன் வே” மற்றும் “குழலி” என இரண்டு தரமான படங்களாக தயாராகி வருகிறது. “ஒன் வே” படம் குறித்து நடிகை ஆரா பகிர்ந்து கொண்டதாவது…. நடிகையாக எனது பயணத்தை தொடங்கிய போதே நல்ல தர மான, அழுத்தமான கதையுள்ள, படங்களில் கனமான கதாப்பாத்திரங்களில் தான் நடிக்க வேண்டுமென தீர்மானித்தேன். நேர்த்திமிகுந்த, சவாலான கதாப்பாத்தி ரங்களுக்கு நான் எப்போதும் தயார். நான் நினத்த மாதிரியான கதையமைப்பு கூடிய “ஒன் வே” படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் இப்படத்தில் முதன்மை கதாப் பாத்திரத்தின் தங்கையாக, கோவை சரளா மேடமுடைய மகளாக நடிக்கிறேன். கோவை சரளா மேடமுடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். பல்வேறு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில், நம் மனங்களை கொள்ளை கொண்ட நடிப்பை தந்தவர் கோவை சரளா மேடம். இவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தும், அவர் என்னிடம் வெகு இயல்பாக, எளிமையாக பழகினார். அவருடன் நடித்த தருணங்கள் எப்போதும் வாழ்வின் இனிமையான மறக்க முடி யாத தருணங்களாக இருக்கும். “ஒன் வே” திரைப்படம் இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக முக்கியமான படமாக இருக்கும். என்றார். ராஜாத்தி பாண் டியன் அவர்கள் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் M S சக்திவேல் இயக்குகிறார். தன் முதல் படைப்பான “மைதானம்” மூலமாக விமர்சகர்களின் ஒட்டுமொத்த கவன த்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் நடிகர் பிரபஞ்சன் முன் ணனி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆரா அவருக்கு சகோதரியாக நடிக்கிறார். “கோலமாவு கோகிலா” பட வில்லன் வினோத் இதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவை சரளா மிக முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும் ஜோக்கர் பாவா செல்லதுரை, கன்னத்தில் முத்தமிட்டால் ஹஷி குமார், கடாரம் கொண்டான் ரவீந்த்ரா, திவ்யங்கனா ஜெயின், அப்துல்லா, தோனி, சுர்ஜித், துப்பறிவாளன் பில்லி மற்றும் கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற பெங் காலி சினிமாவில் புகழ்பெற்ற பருன் சந்தா, கௌதம் ஹால்டர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.