காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

21.10.2019 அன்று நடைபெறவுள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது.

நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது. தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி, விருப்பமனுக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வருகிற செப்டம்பர் 23, திங்கள்கிழமை மற்றும் 24 செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களில் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 25-ம் தேதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்குள் விருப்ப மனு கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.25,000/-, மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ.10,000/- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft) செலுத்தி விருப்ப மனுக்களை சத்தியமூர்த்தி பவனிலேயே சமர்ப்பிக வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.