காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் 25.8.201) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன் ,இ.கா.ப., அவர்கள் 25.8.2019 அன்று காலை, சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள, அண்ணா பல்கலைக்கழக எழுத்து தேர்வு மையத்தில் நடைபெறும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் திருமதி.ஏ.ஜெயலஷ்மி, இ.கா.ப., உள்ளார்.