கீழக்கரையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம்ரூபவ் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருஉத்திரகோச மங்கை உள்வட்டம் கிராமங்களுக்கான 1429-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமானகொ.வீர ராகவ ராவ் தலைமையில் இன்று (20.07.2020) நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான தீர்வாய தணிக்கை 20.07.2020 அன்று
தொடங்கி 27.07.2020 வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்றது. அதன் படி கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமான கொ.வீரராகவ ராவ் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக் கை நடைபெற்றது. வருவாய் தீர்வாய தணிக்கையின் முதல் நாளான இன்று திருஉத்திரகோச மங்கை உள்வட்டத்திற்குட்பட்ட எக்ககுடி பனைக்குளம் மாலங்குடி மல்லல் ஆலங்குளம் திரு உத்திரகோசமங்கை நல்லிருக்கை ஆகிய 07 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடை பெற்றது. இத்தணிக்கை முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய்த்துறை கணக்கு பதி வேடுகள் பட்டா ஆவணம் வழங்கியது தொடர்பான பதிவேடுகள் அடங்கல் கிராம வரைபடம் உள்ளிட்ட கணக்குகளை சாpயான நிலையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள காரணத்தால் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கை பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணைய வழியில் சமர்ப்பித்திட இணையதளம் செயல்படுத்தப் பட்டுள்ளது. வருவாய் தீர்வாயம் தொடர்பாக பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் 20.07.2020 முதல் 27.07.2020 வரை மனுக்களை சமர்ப்பிக்கலாம். இம்மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு காணப்படும். இந்த நிகழ்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.தனுஷ்கோடி உதவி இயக்குநர் (நில அளவை) ஆர்.கந்தசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சுகுமாறன் வட்டாட்சியர் வீரராஜா உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.