கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 10.8.2020 அன்று பணிக்கு திரும்பிய மயிலாப் பூர் காவல் துணை ஆணையாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், மயிலாப்பூர், கச்சேரி சாலையிலுள்ள மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் அலு வலக வளாகத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூரண குண மடைந்து பணிக்கு திரும்பியதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி னார். மேலும், சென்னை பெருநகர காவலில், பல்வேறு காவல் நிலையத்தில் பணி புரிந்தபோது, கொரோனா வால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, மருத்துவர் ஆலோசனைப்படி 10.8.2020 அன்று பணிக்கு திரும்பிய 31 காவல் ஆளிநர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் அமல்ராஜ் (தலைமையிடம்), R.தினகரன், (தெற்கு), N.கண்ணன், (போக்குவரத்து) P.C.தேன்மொழி, (மத்தியகுற்றப்பிரிவு) இணை ஆணையாளர்கள் R.சுதாகர், (கிழக்கு) C,மகேஷ்வரி, (மேற்கு) V.பாலகிருஷ்ணன், (வடக்கு) திருமதி.லட்சுமி, (போக்குவரத்து தெற்கு) துணை ஆணையாளர்கள் R.திருநாவுக்கரசு, (நுண்ணறிவுப்பிரிவு), M.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு), தீபாசத்யன், (மத்தியகுற்றப்பிரிவு-2) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.