சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள்

விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த தீரர் சத்தியமூர்த்தி, மக்கள் தலைவர் என்று அன்பாக அழைக்கப்பட்ட ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் 19.8.2020 அன்று காலை 11.30 மணியளவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான உ. பலராமன், பொதுச் செயலா ளர்கள்  டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் சிவராஜசேகரன், வீரபாண்டியன் மற்றும் பலர் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.