சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

பூக்கடை பகுதியில் 2 துணிக்கடைகளில் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிய இராஜஸ்தான் மாநில குற்றவாளிகள் 3 பேரை வெளிமாநிலங்கள் சென்று கைது. பணம் ரூ.4.65 லட்சம் பறிமுதல். சென்னை, பூக்கடை, குடோன் தெரு, எண்.56 என்ற முகவரியில் தலராம் மற்றும் பரஸ்மால் ஆகியோர் தனித்தனியாக மேல் மற்றும் கீழ்தளங்களில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த 08.12.2019 அன்று இரவு மேற்படி கடைகளின் ஷட்டரை உடைத்து யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ரொக்கம் 8.31 லட்சம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து மேற்படி தல ராம் மற்றும் பரஸ்மால் ஆகியோர் C-1 பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய C-2 யானை கவுனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.D.ராஜகுமார் தலைமையில், தலைமைக்காவலர்கள் திரு.S.A.முகமதுயாகியா, (த.கா.18231), திரு.S.கெளரிசங்கர், (த.கா.26817), முதல் நிலைக்காவலர் திரு.S..முகமது (43394) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து 1.தயான்ராம், வ/21, த/பெ.மங்கள்ராம், ராஜஸ்தான் மாநிலம் 2.மகேஷ்சௌத்ரி, வ/24, த/பெ.மகேந்திர சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் ஆகிய இருவரையும், இராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். மேலும் இவர்கள் அளித்த தகவலின்பேரில் தனிப்படையினர்
கோவா மாநிலம் சென்று, அங்கு பதுங்கியிருந்த மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஷியாம் குர்ஜார், வ/23, த/பெ.தேவ்ராம் குர்ஜார், ராஜஸ் தான் மாநிலம் என்பவரை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். மேற்படி குற்றவாளிகளிடருந்து ரூ.4.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.