சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கொரோனா தொற்று சம்பந்தமாக பாடல் பாடி விழிப்புணர்வு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டு. சென்னை பெருநகர காவல், S-1 புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணபுரியும் .P.மணிமாறன் என்பவர் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக பாடல்கள் எழுதியுள்ளார். உதவி ஆய்வாளர் மணிமாறன் S-1 புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள M.H பாயிண்டில் பணியிலிருக்கும் போது, கொரோனா தொற்று சம்பந்தமான விழிப்புணர்வு பாடல்களை பாடி வாகன ஓட்டிகளிடம் கொரோனா தொற்று பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார். மேலும் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பாடல்களை பாடி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிமாறனின் இந்தப்பணி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பாக பணிபுரிந்த வில்லிவாக்கம் சரக உதவி ஆணையாளர் .G.அகஸ்டின் பால் சுதாகர், V-6 கொளத்தூர் தலைமைக்காவலர்/ஓட்டுநர் .D.ராஜசேகரன் (த.கா.26608) மற்றும் தலைமைக் காவலர் .N.எமரோஸ் (த.கா.20373), T-3 கொரட்டூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் .E.புகழ், (மு.நி.கா.28615) மற்றும் ஊர்காவல் படை வீரர் .K.நல்லுசாமி (HG.4600) மற்றும் S-1 புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் .P.மணிமாறன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 9.7.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.