சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிய தாய், மகள் உட்பட3 பெண்கள் கைது: சென்னை, புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் முதல் தெரு, எண்.38 என்ற முகவரியில் வசித்து வரும் நவரோஜினி, பெ/வ.75 என்ற மூதாட்டி கடந்த 22.7.2019 அன்று காலை புது வண்ணாரப்பேட்டை, லஷ்மி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அவ்வழியே ஷேர் ஆட்டோவில் வந்த 3 பெண்கள் நவரோஜினியை வயதான பெண்மணியாக இருக்கறீர்களே? வாருங்கள் செல்லும் வழியில் இறக்கி விடுகிறோம் எனக் கூறி நவரோஜினியை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு சென்றனர். மேலும், 3 பெண்களும் நவரோஜினியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு இறங்கி சென்றனர். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்ற மூதாட்டி
நவரோஜினி கவனித்தபோது, அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலி காணவில்லை. பின்னர் ஆட்டோவில் தன்னுடன் வந்த 3 பெண்கள் திருடி யிருப்பார்கள் என அறிந்த நவரோஜினி இது குறித்து H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. ராமச் சந்திரன், தலைமைக் காவலர்கள் அசோக்குமார் (த.கா.27169), பிரவீன்குமார் (த.கா.26689) மற்றும் முதல்நிலைக் காவலர் சரவணன் (மு.நி.கா.36105) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படையினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த மறைக்காணி பதிவுகளை ஆய்வு செய்து, 3 பெண்களின் உருவத்தை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேற்படி கவனத்தை திசை திருப்பி திருடிய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மந்தித் தோப்பு பகுதியைச் சேர்ந்த 1.மரியா, பெ/வ.40, க/பெ.ராஜேந்திரன், இவரது மகள் 2.ஜோதி, பெ/வ.25, க/பெ.ஐயப்பன், 3.பஞ்சவர்ணம், பெ/வ.32, க/பெ.கிருஷ்ணன் ஆகிய 3 பெண்களை 14.9.2019 அன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரைணையில் மேற்படி 3 பெண்களும் இது போல, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 வயதான பெண்களிடம் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள் திருடியது தெரியவந்தது.

காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 குற்றவாளிகள் கைது: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாபுராஜ், வ/23 மற்றும் அவரது நண்பர் பவன் சங்கர் ஆகியோர் கடந்த 04.9.2019 அன்று காசிமேடு, அத்திப்பட்டு பள்ளம் என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் பாபுராஜ் மற்றும் பவன்சங்கரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் சங்கிலி, ½ சவரன் மோதிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் பாபுராஜ் மற்றும் பவன்சங்கர் இது குறித்து N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.G.செல்வகுமார், திரு.S.சுப்ரமணி, தலைமைக் காவலர் S.சதிஷ்குமார் (த.கா.26583) மற்றும் முதல்நிலைக் காவலர் A.செந்தில்குமார் (மு.நி.கா.29356) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி களான அப்பகுதியைச் சேர்ந்த 1.சூர்யா, வ/19, த/பெ.சூசைராஜ், 2.மதன், வ/23, த/பெ. தில்குமார், 3.மதன் குமார், வ/24, த/பெ.ஆறுமுகம், 4.சுரேந்தர், வ/20, த/பெ.சுரேஷ், 5.17 வயது இளஞ்சிறார் ஆகிய 5 பேரை மறுநாள் (05.9.2019) அதிகாலை கைது செய் தனர்.

அவர்களிடமிருந்து, 2 சவரன் தங்கச்சங்கிலி, 4 சவரன் மோதிரம், செல் போன்கள் -2 மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கத்திகள்-2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மதன் என்பவர் N-2 காசிமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் உள்ளதும், மதன்குமார் மற்றும் இளஞ்சிறார் மீது N-2 காசிமேடு காவல் நிலையத்தில் குற்ற வழக்கு உள்ளதும் தெரியவந்தது. 3.பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகார்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்த பெண் காவல் ஆய்வாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை
தடுக்கும் பிரிவு (Crime Against Women & Children) கடந்த 03.6.2019 அன்று தொடங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில், சென்னை பெருநகர காவலின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு அதிகாரியாக துணை ஆணையாளர் திருமதி. எச்.ஜெயலஷ்மி அவர்கள் நியமிக்கப்பட்டு, சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இப்பிரிவுடன் சென்னை பெருநகர காவல்துறையின் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த புகார்களுக்கு இப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 26.8.2019 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு வழங்கிய 40 அம்மா ரோந்து வாகனங்களும், இப்பிரிவிற்கும், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அனுராதா அவர்கள் 30.8.2019 அன்று படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு தொடர்ந்து பள்ளியில் படிக்க உதவி செய்தும், 12.9.2019 அன்று சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தும், 17.9.2019 அன்று சுலோச்சனா என்ற 75 வயது மூதாட்டியை மருத்துவ உதவிகள் புரிந்து அவரது மகளிடம் பத்திரமாக ஒப்படைத்தார். W-15 இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.C.தனம்மாள் என்பவர் 13.9.2019 அன்று ஆதரவில்லாத 12 வயது சிறுமியை பெண்கள் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்து உதவியும், 15.9.2019 அன்று புகார் அளித்த தம்பதியருக்கு ஆலோசனைகள் வழங்கியும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மீட்டு அன்பகத்தில் சேர்த்தும் உதவிபுரிந்துள்ளார்.

W-5 வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தாரணி என்பவர் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தா முடியாத வசதி குறைந்த 16 மாணவிகளை காலாண்டு தேர்வு எழுத அனுமதிக்காதது குறித்து கிடைத்த புகாரின்பேரில், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்று தந்தார். சென்னை பெருநகர காவலின் சிறார் உதவி புரியும் காவல் பிரிவின் (JAPU-II, St.Thomas Mount) ஆய்வாளர் திருமதி.கஜலஷ்மி என்பவர் அம்மா ரோந்து வாகனம் மூலம் சிறப்பாக கண்காணித்து வந்து, கொண்டித்தோப்பு மற்றும் வால்டாக்ஸ் சாலையில் கொத்தடிமைகளாக இருந்த 60 சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து, பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த H-5  துவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் திரு. ராமச் சந்திரன், தலைமைக் காவலர்கள் அசோக்குமார் (த.கா.27169), பிரவீன்குமார் (த.கா.26689) மற்றும் முதல்நிலைக் காவலர் சரவணன் (மு.நி.கா.36105), N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.G.செல்வகுமார், திரு.S. சுப்ரமணி, தலைமைக் காவலர் S.சதிஷ்குமார் (த.கா.26583) மற்றும் முதல்நிலைக் காவலர் A.செந்தில்குமார் (மு.நி.கா.29356) மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள் திருமதி.அனுராதா, W-16 புளியந்தோப்பு அ.ம.கா.நி., திருமதி.C.தனம்மாள், W-15 இராயபுரம் அ.ம.கா.நி., திருமதி.தாரணி, W-5 வேப்பேரி அ.ம.கா.நி., மற்றும் திருமதி. J.கஜலஷ்மி, JAPU (2), புனித தோமையர்மலை ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 20.9.2019 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.