செல்வகுமார் என்பவர், சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் மின்தூக்கி செய்து தரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருவதாகவும், நித்தியானந்தம் என்பவர் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் செய்யும் வேலை செய்து வந்ததும், நித்தியானந்தம், இந்நிறுவனத்தின் 8 வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.21 லடசம் வசூல் செய்து நிறுவனத்தில் கணக்கு வரவு வைக்காமல் பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், இது குறித்து நித்தியானந்தம் என்பவரிடம் கேட்டபோது, ரூ50,000/- மட்டும் நிறுவனத்தில் செலுத்திவிட்டு, தலைமறைவானதாகவும், அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு நிறுவனத்தின் பணத்தை பெற்று தரும்படியும், செல்வகுமார் என்பவர் இராயப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராயப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில், மேற்படி மோசடியில் ஈடுபட்ட நித்யானந்தத்தை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் நித்யானந்தம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்றும், மோசடி செய்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நித்யானந்தம் விசாரணைக்குப் சிறையில் அடைக்கப்பட்டார்.
வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது
