எம் .எஸ். பாஸ்கர் பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான்  ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார். ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகியாக நதியா சோமு நடித்துள்ளார். மேலும்  சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். என் . நாகராஜ்  வழங்க சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு பின்னணிக் குரல் கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் படத்தின் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டுப் பாராட்டி இருக்கிறார். அவரது பாராட்டால் உற்சாகமடைந்திருக்கிறது படக்குழு. குடும்பத்தினருடன் திரையரங்குகளில் வந்து பார்க்கும் படியாக நெகிழ வைக்கும் காட்சிகளோடு உருவாகி இருக்கிற இந்த ‘ப்ராமிஸ்’ ,ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியீடாக ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது.