லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் “சிட்டா” இந்தப் படத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். சிபிக்கு ஜோடியாக வெகுளி பெண்ணாக ஆராத்யா சாய் தமிழில் அறிமுகமாகிறார். பாலசரவணன், மற்றும் இயக்குனர் மூர்த்தி அரசியல்வாதியாகவும், அவரது மனைவியாக மதுமிதாவும் ஒரு கிராமத்து அரசியல் குடும்பத்தை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். சத்தமின்றி அமைதியான வில்லனாக அருவி மதன் நடித்துள்ளார் இவர்களுடன் செந்தில் முருகன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.********
ஒரு குப்பை கதை, சில நேரங்களில் சில மனிதர்கள் த்ரிஷியம் 2, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் போன்ற சிறந்த படங்களுக்கு இசையமைத்த DC இசையமைக்க, பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுதியுள்ளார். பிரபல எடிட்டர் VT. விஜயனிடம் உதவியாளராக பணியாற்றிய R.K.வினோத் கண்ணா எடிட்டிங் செய்கிறார். கலை – R.மனோ நடனம் – ராதிகா ஸ்டண்ட் – கார்த்திக்வர்மன் மக்கள் தொடர்பு – புவன்செல்வராஜ் தயாரிப்பு நிர்வாகம் – நரசிம்மன் ஸ்டில்ஸ் பாவை வின்செண்ட் டிசைன் G.நந்தகுமார் தயாரிப்பு – செந்தில்முருகன் கரன் நடித்த சூரன் திரைப்படத்தை இயக்கிய பாலுநாராயணன் இந்த படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
டம் பற்றிய இயக்குனர் பாலு நாராயணன் பேசியதாவது……..ஒரு கிராமத்தை நிர்வகிக்கும் கிராம நிர்வாக அலுவலலகம் ( VAO Office ) சுற்றி நிகழும் யதார்த்த சம்பவங்களின் இயல்பான தொகுப்பு தான் இந்த படத்தின் மையக்கரு. நம் நாட்டின் நிர்வாகத்தை பொறுத்தவரை கிராம நிர்வாக அலுவலகத்தில் காலடி வைக்காமல் யாரும் வாழ முடியாது, பிறப்பு,இறப்பு முதல் அனைத்தும் அங்கு தான் பதிவு செய்கிறோம். ஒரு கிராம நிர்வாகம் கெடும் என்றால் ஒன்றிய நிர்வாகம் கெடும், மாவட்ட நிர்வாகம் கெடும், ஏன் மாநில நிர்வாகமே கூட கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்ற கருத்தை வைத்து கிராமத்து சூழலில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை இயல்பாகவும், நகைச்சுவையும் கலந்து இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு மனிதனும் இது எனது ஊரில் நடந்து கொண்டிருக்கிறது இது இப்படித்தான் மாற்றம் இல்லாமல் மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அனைவரும் உணருவார்கள். ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்விற்கு அடிப்படை தேவையான நிலங்களின் அடங்கல்,பட்டா,சிட்டா வாங்க படாத பாடுபடும் சம்பவங்கள் மற்றும் அதனை சுற்றி நடக்கும் வாழ்வியலை இந்த இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறோம். இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையோடு விரைவில் வெள்ளித்திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்கிறார் இயக்குனர் பாலுநாராயணன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றிய மற்ற அறிவிப்புகளோடு விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

