நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம் ‘குட் நியூஸ்’ படபிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்டப் பணிகளுக்குத் தயாராகிறது, நடிகர்கள் ஜெயராம், அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள தமிழ் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமான ‘குட் நியூஸ்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் மகிழ்ச்சியான தருணங்கள் இடம்பெற்றுள்ள சிறப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் வினோத் ஜெயக்குமார் வழங்க, மூவிட்ரோன் புரடெக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படம், குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதைத் தொடும் தருணங்களை ஒன்றிணைக்கும் முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ************
புதிதாக வெளியிடப்பட்டுள்ள படப்பிடிப்பு நிறைவு வீடியோவில், படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள், நடிகர்களுக்கு இடையிலான இயல்பான உரையாடல்கள், படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சியான தருணங்கள் எனப் பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் குழுவினரின் ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் இந்த வீடியோ அழகாக வெளிப்படுத்துகிறது.
கேமராவுக்கு முன்னால் பதிவான காட்சிகளைத் தாண்டி, படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் நிறைவடைந்த நாள் வரை நடைபெற்ற படைப்பிற்கான விவாதங்கள், குழுவினரின் கூட்டு முயற்சிகள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களையும் இந்த வீடியோ கொண்டாடுகிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் இடையே நிலவிய நட்பும் நல்லிணக்கமும் படத்தின் உருவாக்கப் பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றியுள்ளன.
‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, அனுபவமிக்க நடிகர் ஜெயராமின் பங்களிப்பு அமைந்துள்ளது. தனது இயல்பான நடிப்பாலும், குடும்ப ரசிகர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் திறனாலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெயராமுடன் அஸ்வின் இணைந்து நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரங்கள்: தயாரிப்பு நிறுவனம்: Movietron Production வழங்குபவர் / தயாரிப்பாளர்: சாய்வினோத் ஜெயக்குமார் இணைத் தயாரிப்பாளர்: சாய்பிரபு ஜெயக்குமார் இயக்கம்: நாகேந்திர முருகன் வசனங்கள்: பாண்டிராஜ் முதன்மைக் கதாபாத்திரங்கள்: ஜெயராம், அஸ்வின், கல்யாணி அனில் மற்றும் நடித்தவர்கள்: ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் ஒளிப்பதிவு: பிரவீன்குமார் இசை: சித்து குமார் நடன அமைப்பு: ஷெரிப் மாஸ்டர் கலை இயக்கம்: ஜெய்முருகன் படத்தொகுப்பு: அர்ஜுன் பாபு நிர்வாகத் தயாரிப்பாளர்: எல். எம். தனசேகர் இரண்டாவது நிர்வாகத் தயாரிப்பாளர்: அரவிந்தன் மக்கள் தொடர்பு: PRO ரேகா

