செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், திருநீர்மலை, லட்சுமிபுரம் பகுதியைச்சேர்ந்த தேவதர்ஷன் (வயது 12), பூஜா (வயது 13), குஷி (வயது 13), யுவனேஷ் (வயது 10) ஆகிய நான்கு சிறுவர்கள் 03.10.2026 அன்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டை விட்டு சென்றதாகவும், இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் 04.10.2026 அன்று காலை அளித்த புகாரின் மீதும் மேற்படி சிறுவர்கள் குறித்து தேடப்பட்டத்தில் 04.10.2026 அன்று திருநீர்மலை ஏரியில் மூழ்கி நான்கு சிறுவர்களும் இறந்துள்ளனர் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மமுதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பல்லாவரம் மண்டல அலுவலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார், திருநீர்மலை ஏரியில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரணநிதியின் கீழ் தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி ஜெயகிருஷ்ணன், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ரா.சரண்யா, இ.ஆ.ப., தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடாசலம், வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

