தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் பொது மக்களின் பாதுகாப்பிற்கும், இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு சிரமமாகஇருப்பதாலும், மழைக்காலங்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, (26.11.2026) மண்டலம் – 5 க்கு உட்பட்ட மேஜர் முகுந்த் சாலையில் மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மேஜர் முகுந்த் சாலை முழுவதும் மாநகராட்சியின் எந்தவித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் கண்டறியப்பட்டு, உடனடியாக அகற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 26.11.2026 மட்டும் மொத்தம் ரூ.3,90,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதி பெறாமல் பலகைகள் வைத்தால்,அபராதத்துடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள், மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

