போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 31 வருடங்களாக போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்துகுழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம்22.11.2026 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமினை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4ல் உள்ள கல்யாண் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் – 4, 32-வது வார்டு, கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் (22.11.2026) காலை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மேயர் வசந்த குமாரி கமலகண்ணன் அவர்கள் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். மேலும் மாநகராட்சி ஆணையாளர் திருமதி ரா. சரண்யா இ.ஆ.ப அவர்கள், மாநகர நல அலுவலர் மரு. N. பூபேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் 179 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், நகர நல வாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சுமார் 61,756 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்நிலையங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு 3,460 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிகள் மற்றும் பிறவேலைகளுக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் சிறப்பு நடமாடும் குழு அமைக்கப்பட்டு 114 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்சுய உதவி குழுவினர்கள் ஆக மொத்தம் 928 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

