“ஆகாயத்தில் ஒரு தாரகை” திரைப்பட விமர்சனம்

சந்தீப் குன்னம், ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிப்பில், க் இயக்கத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ஷர்மா மற்றும் நாசர. ஆகியோரின் நடிப்பில. வெளிவந்திருக்கும் படம் “ஆகாயத்தில் ஒரு தாரகை”.  குக் கிராமம் ஒன்றில் சாத்விகா நன்றாக படித்து வருகிறார். விண்வெளி அஸ்ட்ரோனண்டாக வேண்டுமென்பதுதான் அவரின் ஆசை. ஆனால் அவரின் பெற்றோர் சாத்விகாவை துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். முதலிரவில்தான் சாத்விகாவுக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதை துல்கர் சல்மான் தெரிந்து கொள்கிறார். சாத்விகாவின் ஆசையை நிறைவேற்ற அவரை படிக்க வைக்கிறார். சாத்விகாவும் ராக்கெட்-யை வெற்றிகரமாக அவர்கள் சொன்ன விதிகளுக்குள் பறக்க வைத்துவிட்டால் ஆஸ்ட்ரோனண்ட் ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கும் போது அந்த ராக்கெட் வெடித்து சிதற, கல்லூரியிலிருந்து சாத்விகா இடைநீக்கம் செய்துவிடுகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை. எந்த ஒரு முன்னணி கதாநாயகனும்  நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் துல்கர் படம் முழுவதும் தன் மனைவிக்கு உதவி செய்து அவர் கனவுக்காக இவர் படும் கஷ்டம் என, பல இளம் பெண்கள் இப்படி ஒரு கணவர் நமக்கு அமைய வேண்டும் என ஏங்கும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். சாத்விகா கல்பனா கதாபாத்திரத்தில் வாழ்ந்து தான் உள்ளார், இதுதான் முதல் படம் என்றால் நம்ப முடியாத அளவிற்கு சிறப்பான நடிப்பு, அதிலும் அவர் கண்களில் கனவை தேடும் ஏக்கம், அதற்காக அவர் போடும் உழைப்பு என மிகச்சிறந்த அறிமுகம். படத்தின் முதல் பாதி கல்பனா கனவை தேடியே சென்றாலும், துல்கரின் தியாகம் குறிப்பாக தன் அக்காவிடம் நீ டாக்டர் ஆகவேண்டும் என நினைத்தாய், அப்போது என்னால் முடியவில்லை, தற்போது கல்பனா கனவில் உன்னை பார்க்கிறேன் அக்கா என சொல்லி அக்கா ஸ்வாசிகாவிடம் கல்பனா கனவு குறித்து சொல்லும் இடமெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. படத்தின் இரண்டாம் பாதி கனவுகளை தொலைத்து வீட்டு வேலைகளை பார்க்கும் சாமனிய பெண்ணாக கல்பனா இருக்க, இல்லை இதுதான் உன் உலகம் என துல்கர் மீண்டும் கல்பனா கனவை தூண்டுகிறார், அதோடு மட்டுமில்லாமல் ராக்கெட் செய்யும் கம்பெனி நடத்தும் ஸ்ருதியிடம் அவர் கொண்டு சேர்க்கும் இடம், அங்கிருந்து கல்பனா கனவு மீண்டும் தொடங்குவது என மீண்டும் படம் சூடு பிடிக்கின்றது. டெக்னிக்கல் ஆக ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிரமாதம், அதிலும் ஜிவி இசை படத்தின் மற்றொரு நாயகன் போல் ஆக்ரமித்துள்ளது. முயற்சி வீணாகாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயகுநர் பவன் சதினேனி