செங்கல்பட்டு மாவட்டதின் வாக்காளர் பட்டியல் திருத்தம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான  அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்  இன்று  (21.11.2026) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, மேற்கு தாம்பரம் காந்தி ரோடு சாலையில் உள்ள எம்.சி.சி.ஆர்.எஸ்.எல் மேல்நிலைப் பள்ளி மற்றும் மெட்ராஸ் சேவா சதன் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர் இ. ஆ. ப., இன்று (21.11.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மு.வீரப்பன் இ.ஆ.ப., அவர்கள், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி.ரா.சரண்யா இ. ஆ. ப., தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.எஸ்.ரேணுகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.