தாம்பரம் சட்டமண்ற தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை ஆணையர் வெளியிட்டார்

செங்கல்பட்டு மாவட்டம், எண். 31 – தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கான சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR 2026) வரைவு வாக்காளர் பட்டியல் (பாகம் எண் 1 முதல் 463 வரை), வாக்காளர் பதிவு அலுவலர் / தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ரா.சரண்யா, இ.ஆ.ப., அவர்களால் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. மேற்படி நிகழ்வின்போது, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / தாம்பரம் வட்டாட்சியர் திருமதி. வெ. ராதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.