புதிய பள்ளிவாசல் திறப்பு

சென்னை கோடம்பாக்கம் தொடர்வண்டி சாலையில் செய்தானி பி பள்ளிவாசல் மற்றும் மதரஸாவின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளிவாசலை தென்னிந்திய கல்விச் சங்கத்தின் தலைவரும் புரப்பஷனல் தூதஞ்சலின் நிர்வாக இயக்குநருமான அல்ஹாஜ்.எஸ்.அகமது மீரான் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வக்பு வாரிய மேனாள் தலைவரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் செயலாளருமான ஹாஜி.எம்.அப்துல் ரஹ்மான், வக்பு வாரிய உறுப்பினர் எம். முகம்மது பஷீர், தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி, பள்ளிவாசலின் முத்தவல்லி ஹாஜி.ஹசன் அலி ஆலிம், செயலாளர் பேராசிரியர் முனைவர். பி.எம்.எஸ்.அப்துல் கபூர், புதுக்கல்லூரியின் மேனாள் பேராசிரியர் முனைவர். அ.சாகுல் ஹமீது, மேனாள் பேராசிரியர் முனைவர் ஏ.காஜா முகையதீன், புதுக்கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர். அப்துல் மாலிக், மேனாாள் முதல்வர் ஏ.அப்துல் ஜப்பார், மற்றும் இன்னாள் முதல்வர் அஸ்ரார் ஷரீப், துணை முதல்வர் ஹைதர் அலி, துணைத் தலைவர் செய்யது ரஹ்மத்துல்லாஹ், ரஹ்மான் பிளாசா ஷேக் காஜா முகையதீன் பள்ளிவாசல் பொருளாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். முன்னதாக புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர்.செய்யத் அபுதாஹிர் வரவேற்றார். நிறைவாக வழக்கறிஞர் மற்றும் கௌரவ சட்ட ஆலோசகர் எம்.ஹச்.பீர்முகம்மது நன்றியுரை ஆற்றினார்.