மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கிளாப்ஸ் அடித்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற இயக்குநர்கள் முதல் காட்சியை இயக்கினர். நடிகர் ராம் சரணை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் திரையில் காட்டவுள்ளார் இயக்குநர் சுகுமார். நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.*******
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நீலம், பச்சை மற்றும் தங்க நிறங்களின் கலவையில் அழகிய மயில் தோகை இடம்பெற்றுள்ளது. அதில் ராம் சரணின் முகம் இணைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வெள்ளை நிறப் பின்னணியில் தனித்துவமாகக் காட்சியளிக்கிறது. மேலும், படக்குழு வெளியிட்டுள்ள ‘யூ கேன் இமேஜின்’ என்ற வாசகம், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
*தொழில்நுட்பக் குழு விவரம்:* கதை, திரைக்கதை, இயக்கம்: சுகுமார், தயாரிப்பு நிறுவனங்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ், தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி, பூஷன் குமார், மக்கள் தொடர்பு: வம்சி-சேகர், மாதுரி மது, மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

