லிஷா பி.சந்திரன், ஆதித்யா ஜெ.ராஜு ஆகியோரின் தயாரிப்பில் ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கத்தில், அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து, குமரேசன், வினோத், கிஷான், கலைவாணி பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில், ஜீ5 இணையதளத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “ஆக்டோபஸ்”. விழுப்புரத்திலுள்ள ஒரு சிறிய குடியிருப்பு பகுதியில் சில குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் ஒரு இளம் ஜோடிகள் கணவன் மனைவியாக குடியேறுகிறார்கள். கணவன் அக்குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களின் வெறுக்கும் அளவுக்கு சைக்கோத்தனமாக நடந்து கொள்கிறார். ஆனால் அவரின் மனைவி அக்குடியிருப்பில் வாழ்கின்ற அனைவருடனும் தங்கை மகள் போல பாசத்துடன் பழகி வருகிறாள். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்த்கு உதைத்து துன்புறுத்துகிறான். ஒருநாள் இரவில் ஓ என்று அலறுகிறாள். அவளின் அலறல் சத்தம் அனைவரின் வீடுகளுக்கும் கேட்கிறது. அனைவரும் வெளியேவந்து அவளது வீட்டுவாசலுக்கு வந்துவிடுகிறார்கள். இது இரவு நேரமாக இருப்பதால் காலையில் வந்து பேசிக்கொள்ளலாம் என அனைவரும் கலைந்து அவரவர் வீடுகளுக்கு போய்விடுகிறார்கள். காலையில் வெகுநேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. ஆனால் கணவன் மட்டும் வெளியிலிருந்து வீட்டுக்கு வருகிறான். வீட்டுக்குள் மனைவி இல்லை. அவள் எங்கே போனாள்? கொலை செய்யப்பட்டாளா? கொலை செய்யப்பட்டாள் அவளது பிணம் எங்கே? போன்ற பல கேள்விகளுக்கு சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் மீதிக் கதை மர்மம் நிறைந்த காட்சிகளாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திரா ஹாஷ்மி. பலவிதமான மர்மபடங்களை பார்த்த நமக்கு இப்படம் ஒரு வித்தியாசமான மர்ம தொடராக இருக்கிறது. ஆக்டோபஸ் மீன் இனத்தின் பல கைகள் எங்கெங்கே நீள்வதுபோல் பல துளைக்கதைகளாக நீள்கிறது. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் பார்வையாளர்களைத் தொடர்ந்து தொடருடன் பயணிக்க வைக்கின்றன. கதைக்களத்தோடு நகைச்சுவை இணைந்தே பயணிக்கிறது. இப்படத்தின் காட்சிப்படுத்தப்படாத கதாநாயகன் பின்னணி இசைதான். தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை தொடரின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அஷ்வின் குமாரும் அர்ச்சனா ரவிச்சந்திரனும் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கின்றனர். மர்மங்களை விரும்பும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயசந்திரா ஹாஷ்மி. இது உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தொகுக்கப்பட்ட தொடராகும்.


