‘சிங்காரம்’ திரைப்டம் அக். 30ல் திரையரங்குகளில் வெளியாகிறது

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.*********

இவ்விழாவில் நடிகர் யோகிபாபு பேசியதாவது: இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தயாரிப்பாளர் ஏ.எஸ். ரமண பாலாஜி பேசுகையில், நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் 27 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்தப் பயணத்தில் தனக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், பலரது உழைப்பும் ஒத்துழைப்பும்தான் ராக் புரொடக்‌ஷன்ஸ் வளர்ச்சிக்குக் காரணம் என்றார். ஒரு படைப்பின் நோக்கம் மிகவும் முக்கியமானது என்றும், கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒரு படைப்பு பார்வையாளர்களின் மனநிலையை மாற்றி, அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு ஊக்கமளிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார். பல சவால்களைக் கடந்து ‘சிங்காரம்’ உருவாகியுள்ளதாகவும், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார். குறிப்பாக, யோகி பாபு பல தருணங்களில் தமக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி, இப்படத்தின் வெற்றியில் முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

*தொழில்நுட்பக் கலைஞர்கள்:* தயாரிப்பு நிறுவனம் – ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் – ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி எழுத்து மற்றும் இயக்கம் – கே.வி. கதிர்வேலு இசை – சாம் சி.எஸ். பாடல்கள் – விவேகா ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ். குமார் படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர் கலை இயக்கம் – குருராஜ் சண்டைப் பயிற்சி – ஃபேன்டம் பிரதீப் மக்கள் தொடர்பு – ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்