ரவி ஷங்கர் யேலோமான்சில்லி, நவின் யெர்னேனி ஆகியோரின் தயாரிப்பில், கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில், சைத்ரா ஆச்சார், சூரியராஜ் வீரபத்தினி, சரண் லக்கராஜு, ரமேஷ் இந்திரா, பிரீத்தி பகதாலா, ரேகா நிரோஷா, சஷாங்க் பாட்டீல் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “418”. இது ஒரு பேயின் கதை. கடிவாளம் இல்லாத கற்பனை குதிரையில் இயக்குநர் பயணிப்பதுதான் பேயின் கதை. சிறிதளவும் சமுதாய சிந்தனை இல்லாத, பார்வையாளர்களை அச்சமூட்டுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தயாரிப்பதுதான் பேயின் கதையாக அமையும். வேதகிரி மலையில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரி விடுதியில் 15 வருடங்களாக 418 எண் அறை பூட்டியே இருக்கிறது. அந்த அறைக்கு பக்கத்திலுள்ள ஒரு அறையில் மாணவனாக சூர்யராஜ் வந்து தங்குகிறார். இரவு நேரங்களில் அவருக்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறார். அவரது நண்பர்கள் அக்கல்லூரியின் மனநல மருத்துவரிடம் காட்டுகிறார்கள். அம்மருத்துவர் அந்த 418 வது அறையின் மர்மத்தை விவரிக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையினால் ஷைத்தானை வணங்குகிறார் சைத்ரா. தனக்கு 6 நபர்களை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று ஷைத்த்கான் கூறுகிறது. அதற்காக தனது கணவரின் உறவுக்கார பெண்கள் மூன்று பேர்களை நரபலி கொடுக்கிறாள் சைத்ரா. நான்காவது நரபலி கொடுக்கும்போது சைத்ரா இறந்து விடுகிறாள். மீதமுள்ள மூன்று நரபலியை சைத்ராவின் ஆவி கொடுக்க முயற்சிப்பதுதான் மீதிக்கதை.
கரடுமுரடான பாதையில் திரைக்கதை செல்கிறது. சொல்ல நினைப்பதை தெளிவு இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர்களை அச்சமூட்டிவதுதான் பேயின் கதை என்பதால் அந்த சிந்தனையிலேயே படத்தின் முழு நேரத்க்தையும் செலவிட்டிருக்கிறார் இயக்குநர். அவரின் சிந்தனைக்கு வலது கையாக அல்லது உறுதுணையாக பாடுபட்டவர்கள் இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் ஆவார்கள். ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டுமென்ற ஆசையால் நரபலி கொடுக்கும் அளவுக்கு பெண்கள் துணிவார்களா? என்பது சந்தேகம்தான். புதையலுக்காக பெற்ற மகளை நரபலி கொடுக்கும் ஒரு முட்டாள்தனமான சம்பவம் நடந்தேறியது சில நாளிதழ்களில் வெளிவதிருப்பதை இயக்குநர் பார்த்திருப்பார் போலிருக்கிறது. அதன் பிரதிபலிப்பாக இக்கதையை இயக்கியிருக்கலாம். கடல் தண்ணீரை உள்வாங்கி, பிறகு வேகமாக கரையை கடந்து ஊரை அழிக்கும் சுனாமிபோல் கதையின் கருவை உள்வாங்கி பிறகு ஆவேசமாக நடித்து தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சைத்ரா. அல்டசியமான நடையுடை பாவனைகள் என்று ஈர்க்கிறார் பிரீத்தி பகதாலா. மொத்தத்தில் பேயின் தலைவெறியாட்டம் திரையரங்கை அலற வைக்கிறது.

