சிறுமி பாலியல் முயற்சி பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு

சென்னை, வியாசர்பாடி பகுதியில் 5 வயது சிறுமியிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பூஜா என்ற பெண்மணி செல்போனில் படம் பிடித்து ஆதாரங் களை, தனது கணவர் முகமது அலி உதவியுடன் துணிச்சலாக காவல் நிலையத்தில் சமர்ப்பித் துள்ளார். துணிச்சலுடன் செயல்பட்ட பெண்மணி பூஜா மற்றும் அவரது கணவர் முகமது அலி ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.