செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது. சென்னை, அத்திவாக்கம், மேட்டு தெரு, எண்.26 என்ற முகவரியில் வசிக்கும் ரூபன், வ/19, த/பெ.நந்தகோபால் என்பவர் கடந்த 23.8.2019 அன்று காலை சுமார் 06.00 மணியளவில் வடகரை சிக்னல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒரு நபர்
ரூபனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூபனின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே ரூபன் சத்தம் போடவே, சத்தம் கேட்டு சற்று தொலைவில் கண்காணிப்பு பணியிலிருந்த M-4 செங்குன்றம் காவல் நிலைய தலைமைக் காவலர் K.லோகநாதன் (த.கா 19739) என்பவர் செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டிச் சென்று பிடித்து செல்போன் மற்றும் கத்தியை பறிமுதுல் செய்து M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் நடத்திய விசாரணையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது வீரராகவன், வ/25, த/பெ.முனியன், எண்.1/164, எம்.ஜி.ஆர். தெரு, காந்திநகர், சோழவரம் என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வீரராகவன், ரூபனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பியபோது பிடிபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில் குற்றவாளி வீரராகவன் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கத்தி-1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட வீரராகவன் மீது சோழவரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வீரராகவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 பேர் கைது

இதே போல, சென்னை, பாடியநல்லூர், நேதாஜி நகர், மொண்டியம்மன் நகர் முதல் தெரு, எண்.2/449 என்ற முகவரியைச் சேர்ந்த சரவணன், வ/48, த/பெ.வெங்கடாச்சலம் என்பவர் 16.08.2019 அன்று அதிகாலை சுமார் 05.30 மணியளவில், செங்குன்றம், திருவள்ளுவர் ரோடு, ஆலமரம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த 3 பேர் சரவணனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். சரவணனிடம் பணமில்லாததால், 3 பேரும் சேர்ந்து சரவணனின் Redmi செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். சரவணன் சத்தம் போட்டுக் கொண்டே அவர்களை துரத்திச் சென்றபோது, சற்று தொலைவில் கண்காணிப்பு பணியிலிருந்த M-4 செங்குன்றம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் (மு.நி.கா.28092) S.செந்தில்குமார், காவலர் (கா.எண்.43465) M.மூவேந்தன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் (HG 629) M.சந்திரபிரபு ஆகியோர் சத்தம் கேட்டு செல்போன் பறிப்பு குற்றவாளிகளை துரத்திச் சென்று 3 பேரையும் பிடித்து செல்போனை பறிமுதல் செய்து M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு பிடிபட்ட குற்றவாளிகளின் பெயர் விஜய் (எ) தம் விஜய், வ/24, த/பெ.ராஜா, எண்.4/575, அவ்வையார் தெரு, பி.டி.மூர்த்தி நகர், பாடியநல்லூர், சென்னை-52, மணிகண்டன், வ/19, த/பெ.சிவகுமார், எண்.1/388, திருப்பூர் குமரன் தெரு, பாடியநல்லூர், சென்னை மற்றும் 14 வயது இளஞ்சிறார் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சரவணனின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

விழிப்புடன் செயல்பட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சம்பவத்தின்போதே துரத்திச் சென்று பிடித்து, செல்போன்களை பறிமுதுல் செய்த M-4 செங்குன்றம் காவல் நிலைய தலைமைக் காவலர் K.லோகநாதன் (த.கா 19739), முதல்நிலைக் காவலர் (மு.நி.கா.28092) S.செந்தில்குமார், காவலர் (கா.எண்.43465) M.மூவேந்தன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் (HG 629) M.சந்திரபிரபு ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (06.9.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.