சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 20.06.2020 அன்று மாலை பூந்தமல்லி சாலை, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர்
மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். மேலும், வாகனங்களில் வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து விசாரணை செய்யுமாறும், தொற்று ஏற்படாமல் பாதுகாப்புடன் பணிபுரியும்படியும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது பூக்கடை துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன், இ.கா.ப. உதவி ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.