சென்னை சர்வதேச கொரியர் முனையத்தில், ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு, இந்தியக் கரன்சி நோட்டுகள் விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது

சென்னை, ஆகஸ்ட் 27, 2020: கொரியர் மூலம் கரன்சி நோட்டுகள் கடத்தப்படவுள்ளதாக வந்த ரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமானநிலையக் கொரியர் முனையத்தில், சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த மூன்று கொரியர் பார்சல்கள் பிரித்துப் பார்க் கப்பட்டன. ஒவ்வொரு பார்சலிலும், தலா 15 சேலைகள், சால்வைகள் போன்றவை வீதம் இரண் டு பார்சல்களில் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அவை சந்தேகத்தின் பேரில், பிரித்துப் பார்க்கப் பட்ட போது, தெரிவித்தபடி அதில் சேலைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், 5 சேலைகளின் மடிப்புகளுக்குள் வெண்மை நிறக் கவர்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அந்த கவர்களைப் பிரித்துப் பார்த்தபோது, ஒவ்வொன்றிலும் 10,000 அமெரிக்க டாலர் நோட்டு இருந் தது. இந்திய ரூபாய் மதிப்பில், ரூ.37 லட்சம் பெறுமான மொத்தம் 50,000 டாலர் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு அட்டைப் பெட்டியைப் பிரித்த போது, அதி லும், கூறியிரு ந்தபடி சேலைகள் இருந்தன. அதில் 5 சேலைகளின் மடிப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டி ருந்த நான்கு வெள்ளை கவர்களில் 1,86,000 சவூதி அரேபிய ரியால்களும், 5-வது கவரில் 4000 யூரோ, 25000 சுவிஸ் பிராங்க், 18000 சிங்கப்பூர் டாலர் ஆகியவை மறைத்து வைக்க ப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெளிநாட்டுக் கரன்சிகளின் மதிப்பு 69.5 லட்சம் ரூபா யாகும். மொத்தம் ரூ.1.06 கோடி மதிப்பிலான கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடைசிப் பார்சலில் சட்டைகள், லெக்கிங்ஸ் இருப்பதாகக் கூறப்பட்டது. அதை திறந்து பார்த்த போது, 15 சட்டைகளின் மடிப்புகளுக்குள் மறைத்து வைக்கப்படிருந்த வெள்ளை கவர்களில், 2000 ரூபாய் நோட்டுகள் கொண்ட தலா ரூ. 2 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், ரூ.30 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன புகைப்படத் தொழிலி ல் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்ட, சென்னையைச் சேர்ந்த இரண்டு பேரின் பெயர்களில் இந்த பார்சல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மற்றும் இந்தியக் கரன்சி நோட்டுகள், 1962-ஆம் ஆண் டின் சுங்கச் சட்டம் மற்றும் 2015 எப்.இ.எம் விதிமுறைகள் (கரன்சி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) ஆகியவற்றின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் திரு. ராஜன் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.