சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலை மைக் காவலர் R.தேசிங்கு, (த.கா.20542) என்பவர் 03.7.2020 அன்று இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த தலைமைக் காவலர் B.ராபர்ட், (த.கா.37120) என்பவர் 09.7.2020 அன்று இறந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேற்படி 2 தலைமைக் காவலர்களின் குடும்பங் களுக்கு உதவுவ தற்காக மேற்படி தலைமைக் காவலர்களுடன் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் தமிழகம் முழுவதும், சபரிநாதன் என்ற தலைமைக் காவலர் முயற்சியால் உதவும் உறவுகள் என்ற பெயரில் வாட்சப் குழு மூலம் ஒன்றிணைந்து நிதி திரட்ட முன் வந்தனர். அதன் பேரில், 1999 பேட்ச் காவலர்கள் சுமார் 2,500 பேர் வாட்சப் குழுவில் இணைந்து இறந்துபோன 2 நண்பர் களின் குடும்பத்திற்கு ரூ.26,25,000/- நிதி திரட்டினர். மேற்படி 1999 பேட்ச் காவல் குழுவினர், இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் தெரிவித் ததன் பேரில், காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் தலா ரூ.7,500/- என மொத்தம் ரூ.15,000/- வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப.,27.8.2020 அன்று காலை மேற்படி இறந்து போன தலைமைக் காவலர்கள் தேசிங்கு மற்றும் ராபர்ட் ஆகியோரின் குடும்பத்தினரை வரவழைத்து, இருவரது குடும்பத்திற்கும் தலா ரூ.13,20,000/- என மொத்த வசூ லான தொகை ரூ.26,40,000/- பிரித்து வழங்கினார். இப்பணத்தை இறந்த தலைமைக் காவலர் களின் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் எதிர்கால தேவைக்கு சரியான முறையில் பயன் படுத் திக் கொள்ள காவல் ஆணையாளர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) ஏ.அமல்ராஜ், இ.கா.ப., இணை ஆணை யாளர் எஸ்.மல்லிகா, இ.கா.ப, (தலைமையிடம்) துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (நிர்வாகம்), எஸ்.விமலா, (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.