சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் Tablets India நிறுவனம் வழங்கிய Recharge (Electrolyte) சத்து பானங்களை காவலர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்களுக்கு Recharge (Electrolyte) 25,000 சத்து பானங்களை Tablets India நிறுவனம் வழங்க முன்வந்தது. அதன்பேரில், மேற்படி Tablets India நிறுவனம் வழங்கிய Recharge (Electrolyte) சத்து பானங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் 07.8.2020 அன்று காலை, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இணை ஆணையாளர் (தலைமையிடம்) மல்லிகா, இ.கா.ப, துணை ஆணையா ளர்கள் R.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு) மருத்துவர் M.சுதாகர், (நுண்ணறிவுப் பிரிவு) விமலா, (தலைமையிடம்), K.பெரோஸ்கான் அப்துல்லா, (நிர்வாகம்) Tablets India நிறுவன த்தின் Director (Corporate Support) துருவ் நாராயணன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.