சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றதடுப்புப் பிரிவுக்காக பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனை கள் மற்றும் தகவல்கள் வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் முகநூல் (Face book) மற்றும் டிவிட்டர் (Twitter) ஆகிய சமூக வலைதள தொடர்பு பக்கத்தை 01.9.2020 அன்று காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, பெண்கள் மற்றும் குழந்தை களுக்கெதிரான குற்ற தடுப்புப்பிரிவின் துணை ஆணையாளர் ஜெயலஷ்மி உடனிருந்தார்.