டேனி

மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, PG Media Works பி.ஜி.முத்தையா மற்றும் எம். தீபா இவர்களின் தயாரிப்பில் உருவாகி யிருக்கும் படம்தான், ‘டேனி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லா.சி. சந்தானமூர்த்தி இயக்கியிருக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவில் ஆனந்த்குமார், படத்தொகுப்பில் எஸ்.என்.ஃபாசில், பின்னணி இசையில் சாய் பாஸ்கர், பாடல்களில் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள். ’டேனி’ படத்தின் முதற் கட்டப்பார்வைக்கே, ஐந்து வித்தியாசமான பதாகைகளில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. தற்போது ’டேனி’ படத்தின் இரண்டாம் பார்வை பதாகையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், தனது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்.