தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழி வகைகளா கண்டறி வதற்கு மாறாக, ‘இ’ – வாகனக் கொள்கை 2019 என்ற பெய ரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக் குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட விதிகள் 1989ஐ திருத்தியுள்ளது. கொரானா நோய் பெருந் தொற்று பரவல் காரணமாக, பொதுப் போக்குவரத்தை முடக்கி வைத்து ஐந்து மாதங்களாகும் நிலையில். அதனை தனியார் கைக்கு மாற்றி விடும் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருவதை எதிர்த்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முழு வதும் உள்ள கிராமங்களை இணைத்து, இரவு, பகலாக இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் தினசரி 2.5 கோடி மக்களுக்கு சேவை புரிந்து வரு கின்றன. மேலும் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளர்கள், கலைஞர்கள், மொழிப்போர் தியாகிகள், சட்டமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள் என பல தரப்பினருக்கு இலவசமாகவும். சலுகை கட்டணத்திலும் சேவை அளித்து வருகின்றது. இவை அனைத்தையும் ரத்து செய்யும் நோக்கம் கொண்டுள்ளது. தனியார் வாகனங்களை வாடகைக்கு போவது. அதற் கான ஒப்பந்தம் செய்வது. பாதை ஒதுக்குவது என எல்லா நிலைகளிலும் கமுக்கமாக “கல்லாக் கட்டும்” செயலில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வன்மை யாகக் கண்டிக்கிறது. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்க வழி செய்யும், மோட் டார் வாகன சட்ட விதிகள் 1989ஐ திருத்தம் செய்து, புதிதாக பிரிவு 288 ஏ என்பதை கூடுத லாக சேர்த்து ஜுலை 27 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன், கொரானா நோய் பெருந்தொன்று பரவி வரும் சூழலில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என எதிர் கட்சிகளும், சென்னை உயர் திமன்றமும் வலியுறுத்திய நிலையில், படிப் படியாக மதுவிலக்கு என்ற வாக்குறுதியை மறந்து, உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று, தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடியும், அரசின் வரு வாயில் மூன்றில் ஒரு பங்கும் ஈட்டித் தரும் மதுபான விற்பனைப் பிரிவில் பணியாற்றி வரும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளார்கள் 17 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர் களாகவே வைக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சட்ட அத்துமீறலாகும். கொரானா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டாதது பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இந்த நிலையில், கொரானா தாக்குதலில் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, மருத்துவச் செலவுகளை ஏற்பது, கேரள மாநிலத்தில் உள்ளது போல் மதுக்கடைகளை திருத்தியமைத்து. பணியாளர்களின் பணி நிலைகளை சீரமைப்பது, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பணியாளார்கள் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். வரும் 25ஆம் தேதி இரண்டு மணி நேரம் அடையாள வேலை நிறத்தப் போராட்டதை அறிவித்துள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்திற்கு ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதுடன், மாநில முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வுகாண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.