தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.மாணிக்லால் கர்மாகர், பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் மும்பையில் இருந்து பதவி உயர்வு பெற்று இங்கு வந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அலுவலர்களின் தொகுப்பைச் சேர்ந்த இவர், வருமானவரித்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். சென்னை முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக இருந்த அனு ஜே.சிங்கிடமிருந்து மாணிக்லால் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டார். இந்தத் தகவலை சென்னை வருமானவரி கூடுதல் ஆணையர் திரு.பி.திவாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.